Friday, November 11, 2011

நீ ஒரு பூந்தோட்டம் சுற்றிலும் வண்டோட்டம்
எழுதிய இப்பாட்டும் இரகசியம் காக்கட்டும்
செய்தி அறிந்தாலும் கூடிடும் தேன்கூட்டம்
நீ ஒரு பூந்தோட்டம் சுற்றிலும் வண்டோட்டம்

மேல்நாட்டு மேனகையே இதழுதிர்ந்த ரோஜாவோ
சிறுகண் மல்லிகையோ கருவிழி கருங்குவளை
சிரித்தால் செவ்வரளி படுத்தால் படர்முல்லை
கையோ செங்காந்தாள் மணிகழுத்து மண்வாழை

நீ ஒரு பூந்தோட்டம் சுற்றிலும் வண்டோட்டம்

குவளை கொங்கைகளும் கொன்றை விரல்களும்
தாமரை இதழ்நாவும் தும்பை முகர்மூக்கு
வஞ்சிக்கொடி இடையும் வாகை முடிமுடிவும்
செருந்தி செவிகளும் பிச்சி புன்னகையும்

நீ ஒரு பூந்தோட்டம் சுற்றிலும் வண்டோட்டம்

No comments:

Post a Comment