Monday, November 14, 2011

அப்படி சிரிக்காதேடா கண்ணா

அப்படி சிரிக்காதேடா கண்ணா அப்படி சிரிக்காதேடா

மண்ணை படைத்துவிட்டு என் புன்னகை நிறுத்திவிட்டு
கண்ணை கலங்கவிட்டு கண்ணீர் வடியவிட்டு
அப்படி சிரிக்காதேடா கண்ணா அப்படி சிரிக்காதேடா

வெண்ணை திரட்டிவைத்த செம்பானையை உடைகாதேடா
கல் எறிந்து உடைகாதேடா துன்பத்தை வாழ்வில் கலக்காதேடா
அப்படி சிரிக்காதேடா கண்ணா அப்படி சிரிக்காதேடா

என்னையும் படைத்துவிட்டு பெண்ணையும் படைத்துவிட்டு
என்னுள் காதல்வைத்து எங்களுள் மோதல்வைத்து
அப்படி சிரிக்காதேடா கண்ணா அப்படி சிரிக்காதேடா

என்னை கதறவிட்டு நீ இங்கு சிரிப்பதேன்ன
என் கண்ணீர் வடிக்க உன் முகம் மகிழ்கிறதோ
சிரிப்பை நீ அடக்காதேடா கண்ணா அப்படி சிரிக்காதேடா

Friday, November 11, 2011

நீ ஒரு பூந்தோட்டம் சுற்றிலும் வண்டோட்டம்
எழுதிய இப்பாட்டும் இரகசியம் காக்கட்டும்
செய்தி அறிந்தாலும் கூடிடும் தேன்கூட்டம்
நீ ஒரு பூந்தோட்டம் சுற்றிலும் வண்டோட்டம்

மேல்நாட்டு மேனகையே இதழுதிர்ந்த ரோஜாவோ
சிறுகண் மல்லிகையோ கருவிழி கருங்குவளை
சிரித்தால் செவ்வரளி படுத்தால் படர்முல்லை
கையோ செங்காந்தாள் மணிகழுத்து மண்வாழை

நீ ஒரு பூந்தோட்டம் சுற்றிலும் வண்டோட்டம்

குவளை கொங்கைகளும் கொன்றை விரல்களும்
தாமரை இதழ்நாவும் தும்பை முகர்மூக்கு
வஞ்சிக்கொடி இடையும் வாகை முடிமுடிவும்
செருந்தி செவிகளும் பிச்சி புன்னகையும்

நீ ஒரு பூந்தோட்டம் சுற்றிலும் வண்டோட்டம்


Friday, November 4, 2011

கைபேசியில் நீபேசிய

கைபேசியில் நீபேசிய
அந்தநாழிகை மறந்ததோ
கண்பேசிடும் கையுராசிடும்
அந்தநாட்களும் கடந்ததே

இன்னுமென்ன தயக்கம் வந்துபேசு நேரிலே
காதல்வந்த மயக்கம் ஏதுமில்லை கனவிலே
தேநீரருந்த செல்வோம் கூட்டமான சாலையில்
கண்ணீர் பகிரவேண்டும் உன்னோடு இந்தபிறவியில்
கைபேசியில் நீபேசிய ...

காலம்கடந்தால் மீனைதானே வேறுகொக்கு தின்றிடும்
காலமான நமதுகாதல் கனவைப்போல கலைந்திடும்
காலஓட்டம் நின்றிடும் நீஎன்முன்னே நிற்கையில்
காலத்தோடு நீயும்வந்து நமதுகாதல் சொல்லிட
கைபேசியில் நீபேசிய ...

Thursday, November 3, 2011

இன்னும் என்ன மாயை

இன்னும் என்ன மாயை (2)
காரின்பின் ஒளிந்திருக்கும்
வெண்நிலவினை போல
இன்னும் என்ன மாயை (2 )
மாங்கனியுள் மறைந்திருக்கும்
மாம்புழுவை போல
இன்னும் என்ன மாயை

கண்முன் காணவில்லை கனவிலும் தோன்றவில்லை
நான் கண்ட இடமெல்லாம் உந்தன் நிழல் படரவில்லை
அறியாத என்முன்னே இன்னும் என்ன மாயை
இன்னும் என்ன மாயை ...

யாரேனும் கண்டிரோ அவள் ஒரு மாயை
இப்பூ உலகினில் அவள் ஒரு பாவை
அவள் ஒரு பாவை அவள் ஒரு மாயை
இன்னும் என்ன மாயை ...